×

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டிவெய்ன் பிராவோ ஓய்வு

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் டிவெய்ன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான டிவெய்ன் பிராவோ, கடந்த 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 14 ஆண்டுகளில்  இவர் 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்டில் 2,200 ரன்னும் (3 சதம், 13 அரைசதம்), 86 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 2,968 ரன்னும் (2 சதம், 10 அரைசதம்), 199 விக்கெட்டும், டி20 போட்டியில் 1,142 ரன்னும் (4 அரைசதம்), 52 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.இந்நிலையில் அவர் அனைத்து விதமான சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பிராவோ அளித்துள்ள பேட்டியில், ‘‘14 ஆண்டுக்கு முன் அறிமுக போட்டியில் நடந்த சம்பவங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

2004ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அணியின் அரக்கு நிற தொப்பியை கையில் பெற்ற தருணம் உணர்வுப்பூர்வமானது.  இளம் வீரர்களுக்கு வழிவிட்டு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன். எனது வெற்றிக்கு உதவிய எனது குடும்பத்தினர் உட்பட்ட எண்ணற்ற பேருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் நன்றி. சர்வதேச போட்டியில் ஓய்வு பெற்றாலும், லீக் டி20 போட்டியில் எனது ஆட்டம் தொடரும்’’ என்றார்.பிராவோ கடைசியாக கடந்த 2016ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியிலும், 2014ல் கடைசி ஒருநாள் போட்டியிலும், 2010ல் கடைசி டெஸ்டிலும் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bravo , Divine Bravo , from,international,cricket
× RELATED ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணியில்...