×

ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீடிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீடிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு அபராதம் விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளையும் விசாரிக்க ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழு அமைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், இது தொடர்பான வழக்குகளை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் விசாரணை குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்கும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி தமிழக அரசு அரசாணை விதித்தது.

இதனை எதிரித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் நவம்பர் 3ம் தேதி முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு நிர்வாகத்தில் தலையிட அவருக்கு உரிமை இல்லை எனவும், தங்களின் சுயநல விருப்பு வெறுப்புகளுக்கு நீதிமன்றத்தை கருவியாக பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்தனர். மேலும் மனு தாக்கல் செய்த நபருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IG Poonamakanakale ,IGP , IG ponmanikkavel,term,Case,High Court
× RELATED போலீசாரின் முயற்சியால் சமூகம் அமைதியாக உள்ளது: போலீஸ் ஐஜிபி பெருமிதம்