×

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா ஊழலில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 4.72 கோடி அபராதம்

லண்டன் : கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா ஊழலில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 4.72 கோடி அபராதம் விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தும் பேஸ்புக்கில் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் என்ற நிறுவனத்தின் மூலம் 5 கோடி பேரின் தகவல்களை திருடியது உறுதிசெய்யப்பட்டது.

இந்த தகவல்கள் அனைத்தும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம் அதற்காக மன்னிப்பும் கோரியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு இந்த ஊழல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா  ஊழல் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 4.72 கோடி அபராதம் விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Facebook for a Cambridge Analytics scam 4.72 crore fine
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை