×

விசாகப்பட்டினத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்

ஹைதராபாத் : விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தால் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கையில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஹைதரபாத் செல்லும் விமானத்திற்காக காத்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் சிலருடன் செல்பி எடுத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த சிறிய ரக கத்தியை எடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் கையில் குத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கையில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், ஜெகன் மோகன் ரெட்டிக்கு விமான நிலையத்திலேயே முதலுதவி அளித்தனர்.  ஜெகன்மோகனின் இடது கையில் குத்திய விமானநிலைய ஓட்டல் ஊழியர் சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சீனிவாசன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jagan Mohan Reddy ,YSR Congress ,Visakhapatnam , YSR Congress leader Jagan Mohan Reddy has been attacked in Visakhapatnam
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...