×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரின் கோவில் வழக்கு விசாரணைக்காக புதிய உற்சவர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரின் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலையை கும்பகோண நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் எடுத்து சென்றுள்ளனர். ஏகாம்பரநாதர் கோவிலில் புதிய உற்சவர் சிலையை செய்ய தங்கம் பயன்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஏகாம்பரநாதர் கோவில் இறை ஆணையர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணைக்காக புதிய உற்சவர் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் எடுத்து சென்றுள்ளனர். 2009 ஆம் ஆண்டு பம்பாய் ஸ்ரீதர் என்பவர் கோவிலுக்கு வழங்கிய உற்சவர் சிலையும் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : enthusiast ,court ,Kanchipuram Ekambaranathar ,trial , Kanchipuram, Utsavar Statue, Ekambaranathar, Gold
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...