×

நெல்லை அருகே நகைக் கடையில் 2 கிலோ நகைக் கொள்ளை

நெல்லை: நெல்லையில் காவல் நிலையம் எதிரே உள்ள நகைக்கடையில் பூட்டை உடைத்து 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. நெல்லை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நெல்லை  டவுன்   காவல் நிலையம் எதிரே உள்ள செங்கோன் முடுக்கு பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை அவர் வழக்கம் போல் கடையை திறக்க வந்துள்ளார்.

அப்போது அவரது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக கடையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்கம் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டவுன் பகுதியில் 100 கணக்கான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இந்த பகுதியில் காவல்நிலையத்திற்கு எதிரே கொள்ளை நடந்திருப்பது நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewel shop ,Nellai , Nellai, police station, jewelry, robbery
× RELATED நெல்லை அருகே நில தகராறில் 3 பேர் கைது