×

கையை உயர்த்துவதற்காக எம்பி.க்களுக்கு 10 ஆண்டில் 7 முறை சம்பளம் அதிகரிப்பு: பாஜ எம்பி வருண் சர்ச்சை பேச்சு

பிவானி: ‘‘நாடாளுமன்றத்தில் வெறுமனே கையை உயர்த்தி காட்டுவதற்காக மட்டுமே, கடந்த 10 ஆண்டுகளில் எம்பி.க்களின் சம்பளம் 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது’’ எனறு பாஜ  எம்பி வருண் காந்தி கூறியுள்ளார்.நேரு குடும்பத்தை சேர்ந்தவர் வருண் காந்தி. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சகோதரர் சஞ்சய் காந்தியின் மகன். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  மேனகா காந்தியின் மகனும் ஆவார். மேடைகளில் எதையும் வெளிப்படையாக சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடியவர். தற்போது, பாஜ.வின் எம்பி.யாக இருக்கிறார்.அரியானா மாநிலம், சுல்தான்பூரில் கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் வருண் காந்தி கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசுகையில், “ எம்பி.க்கள் சம்பள உயர்வு மற்றும் சொத்துகளின் விவரம் குறித்து நான் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள ஊழியர்கள் அவர்களின் நேர்மை  மற்றும் கடின உழைப்புக்கு  ஏற்றார்போல சம்பள உயர்வை பெறுகின்றனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் எம்பி.க்களின் சம்பளமானது, அவர்கள் கை தூக்கியதற்காக மட்டும் 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக நான் கேள்வி எழுப்பினேன். உடனடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு செல்போனில்  அழைப்பு வந்தது. எதற்காக எங்கள் பிரச்னையை அதிகரிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Varun ,MBs ,Controversy Talks , 7 MB salary,increase hand,Baju MP, Varun Controversy Talks
× RELATED வருண்காந்திக்கு சீட் வழங்காதது ஏன்?.. மேனகா காந்தி விளக்கம்