×

சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் கட்டுமானப்பணியை தொடங்க தலைமை செயலாளர் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது: ஒருவர் பலி

மும்பை: மகாராஷ்டிரா தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.மகாராஷ்டிரா அரசு தென் மும்பையில் அரபிக்கடலில் ராஜ்பவன் அருகில் மரைன் டிரைவ் கடற்கரையில் இருந்து 3.5 கிமீ தொலைவில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவிற்கு நினைவுச்சின்னம்  எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான பணி எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிவிட்டார்.  இதற்கான கட்டுமானப்பணி நேற்று தொடங்குவதாக இருந்தது.

இதற்காக கட்டுமான நிறுவனம், நினைவுச்சின்னம் அமைக்கப்பட இருந்த இடத்தில் சிறிய பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு  செய்திருந்தது. இதற்காக நேற்று பிற்பகலில் மாநில அரசின் தலைமை செயலாளர் தினேஷ் குமார் ஜெயின், அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 40 பேர் கட்டுமானப்  பணி தொடங்க இருக்கும் இடத்திற்கு அரசுக்கு சொந்தமான விரைவு படகு மூலம் புறப்பட்டு சென்றனர்.அவர்கள் சென்ற படகு நினைவுச்சின்னம் கட்டப்பட இருக்கும் இடத்தில் இருந்த பாறையில் மோதி கவிழ்ந்தது. உடனடியாக கடலோர பாதுகாப்புப்படை மற்றும் மரைன் போலீசாரும் மீட்புப்பணியில்  ஈடுபட்டனர். அனைவரும் மீட்கப்பட்டாலும் பாஜவை சேர்ந்த தொண்டர் ஒருவர் மட்டும் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Secretary ,sea ,memorial ,Chhatrapati Shivaji , Chhatrapati Shivaji ,construction ,Chief Secretary's boat ,one killed
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை