×

அம்பத்தூர் உட்பட 5 இடங்களில் உள்ள ஹார்டுவேர் நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

ஆவடி: ஆவடி, திருநின்றவூர் அம்பத்தூர், தாம்பரம் வேளச்சேரி ஆகிய இடங்களில் கிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மூலமாக கட்டுமான வேலைகளுக்கு பொருட்கள் சப்ளை மற்றும் வீடுகளுக்கு போர்வெல் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, வருமான வரித்துறை இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட இடங்களில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கதவு மூடப்பட்டது. இந்த சோதனையில் 30க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடைபெற்றது. இதில் மேற்கண்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambattur , Ambattur, Income Tax Department Raid,
× RELATED மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு