×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் நவோமி ஒசாகாவை வீழ்த்தினார் கெர்பர்

சிங்கப்பூர்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரில், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஜப்பானின் நவோமி ஒசாகாவை போராடி வென்றார். சிவப்பு பிரிவு ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் நேற்று நடந்த இப்போட்டியில், நம்பர் 1 வீராங்கனையான கெர்பர் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஒசாகா (3வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் ஒசாகாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த கெர்பர் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 29 நிமிடத்துக்கு நீடித்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gerber ,phenols ,WTO ,Naomi Osaka , WTA,Gerber, Naomi Osaka
× RELATED உலக வர்த்தக அமைப்பின் 13-வது...