×

மித்தாலி சதத்தில் இந்தியா ஏ வெற்றி

மும்பை: ஆஸ்திரேலியா ஏ மகளிர் அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்தியா ஏ அணி 28 ரன் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பந்த்ரா குர்லா வளாக மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை மித்தாலி ராஜ் 105 ரன் (61 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 57 ரன் (32 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்)  விளாசினர். டி20ல் ஒரே இன்னிங்சில்அதிக ரன் எடுத்த இந்திய வீராங்கனைகள் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா (102 ரன்) சாதனையை மித்தாலி முறியடித்தார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோற்றது. டாஹிலா மெக்ராத் 47, ஹீதர் கிரஹாம் 24 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்தியா ஏ பந்துவீச்சில் தீப்தி, பூனம், அனுஜா தலா 2, பூஜா, ராதா, கவுர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. 3வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,win ,Mithali , India A, Mithali
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...