×

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல்: கைப்பற்றியது உளவுத்துறை

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவருடைய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்நிலையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளிக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை இடைமறித்து, அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.

அந்த பார்செல்களில் இருந்த வெடிப்பொருள் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் வீட்டில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களை ஒத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எங்கிருந்து அவர்களுக்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டது என்பது தெரியவந்துள்ளது எனவும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதல் முயற்சிக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் நியார்க் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barack Obama ,US ,Gilani , US President Barack Obama, Gilani Clinton, Bomb, Parcel, Intelligence
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...