×

ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மணல் லாரி, மாட்டு வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறிய பூங்கா

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை நகரில் தினமும் காலை மாலை வேளைகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை  உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலகத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டது. பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் அந்த பூங்கா முட்புதர்கள் சூழ்ந்து விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறிவிட்டது. இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்த கோட்டாட்சியர் சில காரணங்களால் இந்த பூங்காவை மூடி பூட்டு போட்டுவிட்டார். இதனால் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  நடைபயிற்சி செய்யவும், முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை தினமும் பொழுது போக்கவும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் என தினமும் இரவு நேரங்களில் அதிகாலை நேரங்களில் பாலாறு பொன்னை ஆற்று பகுதிகளில் மடக்கி பிடிக்கும் திருட்டு மணல் லாரிகள் டிப்பர் லாரிகள் டிராக்டர்கள் ஜேசிபிக்களை மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து இந்த பூங்கா இடத்தில் விட்டுள்ளனர். எனவே ராணிப்பேட்டை நகருக்கு புதிதாக வந்துள்ள சப்-கலெக்டர் இளம்பகவத்,  நடவடிக்கை மேற்கொண்டு லாரி, டிராக்டர், ஜேசிபிக்கள், மாட்டு வண்டிகளை ஏலம் விட்டு அப்புறப்படுத்திவிட்டு,  பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : park ,office ,Pattan ,Queen ,cow car park , Sand lorry ,park t,parking , cow carts
× RELATED கோடைவிடுமுறையை கொண்டாட கலெக்டர்...