×

சேலம் அருகே பணம், வேட்டி-சேலைகள் பதுக்கிய அதிமுகவினர்

வாழப்பாடி: சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏத்தாப்பூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 லாரிகளில் பண்டல்கள் வந்திறங்கியது. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக அதிமுகவினர் பரிசு பொருட்களை பதுக்கியதை அறிந்த திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று காலை அங்கு திரண்டனர்.இதனிடையே, அதிமுகவினர் வந்து வாக்குவாதம் செய்தனர். உடனே, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம், எம்பி பார்த்திபன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் அதிமுக பெண் பிரமுகர் கலைச்செல்விக்கு சொந்தமான இடத்தில் இருந்த அறையை திறந்து பார்த்த போது, 11 பண்டல்களில் வேட்டி,சேலை இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடை இருந்த கட்டிட அறையின் பூட்டை கல்லால் உடைத்து திறந்தனர். அதில் வேட்டி பண்டல்கள், அரிசி மூட்டைகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் படம் போட்ட சிறிய டைரிகள் இருந்தன. காட்டுப்பகுதியில் இருந்த மற்றொரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பண்டல்களை, சிலர் மினி ஆட்டோக்களில் ஏற்றிச் சென்று விட்டனர்.இதுகுறித்து சிவலிங்கம், எம்பி பார்த்திபன் ஆகியோர் கூறுகையில், ‘‘பண்டல்களில் 100 கோடி ரூபாய் பணமும் இருந்துள்ளது. அதனை மினி ஆட்டோவில் எடுத்துச் சென்று விட்டனர்’’ என்றனர்….

The post சேலம் அருகே பணம், வேட்டி-சேலைகள் பதுக்கிய அதிமுகவினர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Salem ,Vazhappadi ,Ethapur ,Athur ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...