×

மஞ்சளாறு ஆணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தேவதானப்பட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையில் 54 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உள்ளது. இதனை அடுத்து அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வினாடிக்கு 100 கன அடி விதம் தண்ணீர் திறந்து வைத்துள்ளனர்.

அணையின் தண்ணீர் திறப்பால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும். நீர் இருப்பை கணக்கில் கொண்டு 152 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manchar orders, irrigation, water opening
× RELATED பிரசித்தி பெற்ற குன்றத்தூர்...