×

ஆண்டிபட்டி பகுதியில் தொடர் மழையால் பசுந்தீவனங்கள் வளர்ச்சி : கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி: தொடர் மழையின் காரணமாக ஆண்டிபட்டி பகுதியில் வறண்டு கிடந்த விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் பசுந்தீவனங்கள் வளர்ந்துள்ளதை கண்டு கால்நடை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி ஒன்றியம் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பதை முக்கிய தொழிலாகவும் கொண்டுள்ளனர். இந்நகரை சுற்றியுள்ள கன்னியபிள்ளைபட்டி, தெப்பம்பட்டி, பாலகோம்பை, கதிர், சித்தார்பட்டி, ஜி.கல்லுபட்டி, கணேசபுரம், ராமலிங்கபுரம், மரிக்குண்டு, எரதிமக்காள்பட்டி, ரோசனபட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில்  செம்மறியாடுகள், வெள்ளாடுகள், தொழு மாடுகள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

கடந்தாண்டு கால்நடைகளுக்கு போதிய பசுந்தீவனங்கள் மற்றும் தண்ணீர் கிடைக்காததால், கால்நடைகளை சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய அவநிலை ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் புல், பூண்டுகள் முளைத்துள்ளன. கண்ணுக்கு எட்டியவரை பசுந்தீவனங்கள் இருப்பதைக் கண்டு கால்நடை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கால்நடை வளர்ப்பவர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்கு பருவமழை பெய்யாததால் நீர் நிலைகளான ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டன. இதனால் பூமி வறண்டு பாலை வனமாக காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் பல மையில் தூரம் ஓட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் கால்நடைகளை வளர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாவரங்கள் தளிர்த்தும், பசுந்தீவனங்கள் வளர்ந்தும் உள்ளது. இதனால் கால்நடைகளை வளர்ப்பவர்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : greenhouses ,area ,Andipatti , Andipatti, fodder, happy
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...