×

ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க பரிந்துரை : இன்னும் ஒரு வாரத்தில் திறக்க வாய்ப்பு

உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ராயப்பன்பட்டியில் உள்ள சண்முகாநதி அணை 52.5 அடியை கொண்டது. தொடர்ந்து பெய்த மழையால் இதன் முழுக்கொள்ளளவை தொட்டது. இந்நிலையில் தற்போது அணைக்கு 7 கனஅடி வரை தண்ணீர் வருகிறது. இதனை திறந்தால் ஆனைமலையன்பட்டி, எரசை, ஓடைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் உள்ள தோட்டத்து கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், இங்குள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். விவசாயம் அதிகளவில் செய்திட வாய்ப்புகள் உண்டாகும்.

இந்த வருடத்தில் இரண்டு முறை நிரம்பிய சண்முகாநதி அணையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே தண்ணீரை விவசாயத்திற்காக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசின் ஒப்புதலை கேட்டுள்ளனர். இதற்கான பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் திறக்க வாய்ப்பு உள்ளது. பொதுப்பணித்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘சண்முகாநதி அணை திறக்கப்பட முறைப்படி தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : river ,Rayampapatti Shanmuganadi , Rajapanpatti, Shanmuganati Dam, Water
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...