×

மாணவர்கள் பயன்பெறும் வகையில் SRF - HP நிறுவனங்கள் சார்பில் நடமாடும் கணினி பயிற்சி மையம்

திருவள்ளூர்: கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் SRF மற்றும்  HP நிறுவனங்கள் இணைந்து நடமாடும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளனர். தற்போதுள்ள காலகட்டத்தில் கணினியின் பயன்பாட்டை பற்றி கிராமப்புற இளைஞர்கள் தெரிந்துகொள்ளவும், தற்போது கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களின் பயன்பாட்டுக்காகவும், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள SRF மற்றும் HP நிறுவனங்கள் இணைந்து நடமாடும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளனர்.

சொகுசு பேருந்தில் 20 கணினிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையம், ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்ற விகிதத்தில் மாவட்டம் முழுவதும் சுற்றி வரும். மாதத்திற்கு சுமார் 2000 ஆயிரத்திலிருந்து 2,500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கணினி மையம் தயார் செய்யப்பட்டுள்ளதோடு, பெரிய திரை கொண்ட கணினி, ஏசி மற்றும் இண்டர்நெட் வசதி ஆகியவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mobile Computer Training Center ,companies ,SRF ,HP , Students, SRF - HP Institute, Mobile Computer, Training Center
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது