×

ஹாலோவீன் திருவிழா...பெல்ஜியத்தில் வன உயிரினங்களுக்கு வழங்கப்பட்ட பூசணிக்காய்

பெல்ஜியம்: ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டிற்கான ஹாலோவீன் திருவிழா ஆரம்பமாகிவிட்டது. இதனை முன்னிட்டு பெல்ஜியத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு பல்வேறு வடிவில் செதுக்கப்பட்ட பூசணிக்காய்கள் வழங்கப்பட்டன. பெல்ஜியம் நாட்டின் பழமையான உயிரியல் பூங்காவான ஆண்ட்வெர்ப் மிருகக்காட்சி சாலை 1843-ம் ஆண்டு துவங்கப்பட்டது. சுமார் 5,000 விலங்குகள் மற்றும் 950 வகை உயிரினங்களையும் இந்த பூங்கா கொண்டுள்ளது.

விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கம், யானை, காண்டாமிருகம், கொரில்லா, கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளுக்கு பூசணிக்காய்கள் வழங்கப்பட்டது. விலங்குகள் அவற்றை சுவைத்து உண்ட காட்சியை பார்வையாளர்கள் ரசித்தபடி வேடிக்கை பார்த்தனர். அவற்றை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் அவை வேகமாக பரவி வருகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Halloween Festival ,Belgium , Halloween,Festival,Pumpkin,wildlife,animals,Belgium
× RELATED பூசணி வரத்து அதிகரிப்பு விலை கடும் சரிவு