×

பல்கேரியாவில் 2400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வர்த்தகக் கப்பல் கடலுக்கடியில் கண்டுபிடிப்பு

சோஃபியா: பல்கேரியா நாட்டின் கடல் எல்லைக்குள் சுமார் 2400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிரேக்க நாட்டை சேர்ந்த வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மற்றும் பல்கேரிய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளது. இது பல்கேரியாவின் வடக்கு கருங்கடலோரப் பகுதியிலிருந்து கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 23 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சிதைவடையாமல் நல்ல நிலையில் இருப்பதாக கருங்கடலில் இதனை கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்தில் ஆக்சிஜன் அதிகம் இல்லாத பகுதியில் இந்த கப்பல் இருந்ததால், சிதைவடையாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவரை கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கப்பல்களின் பாகங்கள், சிதைவடையாமல் இருந்தவற்றில் இந்தக் கப்பல்தான் மிகவும் பழமையானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bulgaria , 2400-year-old,merchant shipwreck,found,deep sea,Bulgaria
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்