×

`கருப்பா, குண்டா இருந்தாலும், முகம் லட்சணமா இருக்கு’சென்னை பெண்ணிடம் கொஞ்சும் திருப்பூர் கூடுதல் எஸ்.பி: வாட்ஸ் அப்பில் ஆடியோ வைரல்

கோவை: சென்னையை சேர்ந்த பெண்ணிடம், ``நீ கருப்பா இருந்தாலும் முகம் லட்சணமாக இருக்கு... நான், காவல்துறை அதிகாரியா வரமாட்டேன்... தனிப்பட்ட நபராத்தான் வருவேன்’’ என்று திருப்பூர் கூடுதல் எஸ்.பி. கொஞ்சி குலாவும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  
திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி.யாக இருப்பவர் குணசேகரன். இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் டெலிபோனில் கொஞ்சி, குலாவும் ஆடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் விவரம் வருமாறு:
பெண்: சொல்லுங்க சார்...
கூடுதல் எஸ்.பி.: எங்க இருக்கீங்க... கண்டுக்கவே மாட்டேங்குறீங்க...
பெண்: இப்பதான் வீட்ல இருந்து வெளியே கிளம்புறதுக்கு ெரடியாகிட்டு இருக்கேன்..
கூடுதல் எஸ்.பி.: நீங்கதான் சொல்லனும், கூப்பிட்டிருக்கீங்க...
பெண்: நம்ம வாட்ஸ்அப் குரூப்ல உங்கள ஜாயின்ட் பண்ணிவிட்டேன்... நம்ம குரூப்ல இருந்தீங்கன்னா ஒருசில விஷயம் தெரிஞ்சுக்கலாம்ன்னு சேர்த்து விட்டேன்...

கூடுதல் எஸ்.பி.: எந்த குரூப்?
பெண்: மை செய்தி... விரைவு செய்தி...
கூடுதல் எஸ்.பி.: ஆமா... ஆமா...
பெண்: ஆனா, நீங்க டப்புனு குரூப்ல இருந்து வெளியே வந்துட்டீங்க...
கூடுதல் எஸ்.பி.: இல்லடா... நிறைய குரூப் வந்துகிட்டே இருக்கு... அதான் வெளியே வந்துட்டேன்.. என்னடா... கண்டுக்கவே மாட்டேங்கற...
பெண்: சார், நீங்க எல்லாம் மாமனிதர், பெரிய மனிதர்.. உங்களை இந்த குரூப்ல சேர்த்து விட்டா நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்... என உங்களை இணைக்கிறேன்...
கூடுதல் எஸ்.பி.: சரி... இப்ப எங்க இருக்கீங்க...
பெண்: நான், சென்னையிலதான்...
கூடுதல் எஸ்.பி.: சென்னையில... எந்த ஏரியா..?
பெண்: சென்னையில் தாம்பரம் ஏரியா..
கூடுதல் எஸ்.பி.: வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க...
பெண்: நான், அப்பா, அம்மா.

கூடுதல் எஸ்.பி.: சரி... சரி... ஆமா, ஒருதடவை போன் பண்ணீங்களே எதுக்கு..,?
பெண்: ஆமா சார்... அந்த பத்திரிகை மேட்டர்தான்... இன்னும் எப்.ஐ.ஆர் ஆக மாட்டேங்குது.. எவ்வளவோ முயன்றும் இன்னும் எப்ஐஆர் போட மாட்டேங்கிறாங்க... ஒன்னு பண பலம் இருக்கனும்... இல்லைன்னா ஆள் பலம் இருக்கனும்... என்கிட்ட ஒன்னுமே இல்லை...
கூடுதல் எஸ்.பி.: ஏய்.. அழகா இருக்கிற பொண்ணு நீ... உனக்கு என்ன குறை...?
பெண்: (ஹா...ஹா... என பலமான சிரிப்பு...) வெளியே சொல்லிடாதீங்க... சிரிப்பாங்க... அப்ப நீங்க என்னை இன்னும் பாக்கலைன்னு... அர்த்தம்...
கூடுதல் எஸ்.பி.: கருப்பா, குண்டா இருந்தாலும், முகம் லட்சணமா இருக்கா... இல்லையா...
பெண்: அது, பிரம்மா இல்லை... எங்க அம்மா படைச்ச படைப்பு...
கூடுதல் எஸ்.பி.: உங்க முழு பெயர் என்ன... சொல்லுங்க... நான் மெமரியில போட்டு வெச்சிருக்கேன்..
பெண்: கயல்விழி.. விரைவு செய்தி குரூப்ல ஆட் பண்றேன்...

கூடுதல் எஸ்.பி.: குரூப்ல சேர்க்க வேண்டாம்... எதுவா இருந்தாலும் தனியாக அனுப்புங்க...
பெண்: நீங்க குரூப்ல இருந்தா சில பிரச்னை உங்களுக்கு தெரியும். உங்க நாலேஜ்க்கு தெரியனும்ங்கறதால உங்களை குரூப்ல சேர்க்கிறேன்.
கூடுதல் எஸ்.பி.: குரூப்ல வேண்டாம்...
பெண்: திருப்பூர் மாவட்டத்தில ஒரு பிரச்னைன்னா, உங்களுக்கு தெரியப்படுத்த குரூப்ல போட்டுவிட்டுறேன்.. நீங்க பாருங்க...
கூடுதல் எஸ்.பி.: நீங்க என்ன பன்றீங்க... உங்கள பார்க்க நான் சென்னைக்கு வரட்டுமா...?
பெண்: திருப்பூர்ல இருந்து சென்னைக்கு வர்றீங்களா... அதுவும் என்னைய பார்க்கவா?
கூடுதல் எஸ்.பி.: ஏன்... வரமாட்டோமா...? நான், உங்கள வந்து பார்த்தா சந்தோஷப்படுவீங்களா, இல்லையா....?
பெண்: சந்தோஷப்படுவேன்... நமக்கும் காவல்துறை சப்போர்ட் பண்ணுதுன்னு.. சந்தோஷப்படுவேன்.
கூடுதல் எஸ்.பி.: நான், காவல்துறை அதிகாரியா வரமாட்டேன்... தனிப்பட்ட நபராத்தான் வருவேன்.. வரட்டுமா....?
பெண்: தாராளமா வாங்க சார்... என்னைக்கும் உங்களை சென்னை வெல்கம் பண்ணும்...

கூடுதல் எஸ்.பி.: சென்னை வெல்கம் பண்ணுதோ, இல்லையோ... நீ வெல்கம் பண்ணுவியா...? கயல்விழியை பார்க்க வரனுமா, வேண்டாமா?
பெண்: கயல்விழி சென்னையிலதான் இருக்கா, அதான் சென்னை வெல்கம் பண்ணும்னு சொன்னேன்.
கூடுதல் எஸ்.பி.: எப்ப வரனும்னு சொல்லுங்க... ஒரு நாள் ப்ரீ பன்னிட்டு சென்னை வர்றேன்.
பெண்: நான், கமிட்மென்ட் பன்னிட்டு, சொல்றேன்...
கூடுதல் எஸ்.பி.: கண்டிப்பா வர்றேன்...
பெண்: இப்போதைக்கு எப்.ஐ.ஆர். போடச்சொல்லி ஒன்னும் பண்ணல... திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஒரு சின்ன அடி அடிக்கலாமே.. ஏ.சி. அசோகன் சார்தான்...
கூடுதல் எஸ்.பி.: மத்தியானத்துக்கு பிறகு உங்ககிட்ட ப்ரீயா பேசறேன்.
பெண்: ஓ.ேக. சார்... பை...
இப்படி எதிர்முனையில் பேசும் பெண்ணிடம் கூடுதல் எஸ்.பி. கொஞ்சி குலாவும் ஆடியோ,  வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.  இதுகுறித்து, குணசேகரனிடம் கேட்டபோது, ``ஒரு பிரச்னை ெதாடர்பாக 8 மாதங்களுக்கு முன் ஒரு பெண் என்னை அழைத்து பேசினார். மற்றபடி நான், எந்த தவறான நோக்கத்திலும் பேசவில்லை. என்னை களங்கப்படுத்த சிலர் இப்படி ஆடியோ வெளியிட்டுள்ளனர்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kunda ,lady ,Madhu Tirupur Extra SB , Chennai lady, tirupur additional SP
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...