×

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் முறைகேடு தடுக்க சிறப்பு தனிப்படை: போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்க தீவிரம்

வேலூர்: தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் உயர்ரக அயல்நாட்டு மதுவகைகள் மட்டும் விற்பனையாகும் எலைட் கடைகள் 100க்கும் மேற்பட்டவை  இயங்கி வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை அதிகரிக்கவும் முறைகேடுகளை தடுக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஒரு தாலுகாவுக்கு ஒரு தனிப்படை வீதம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒரு டாஸ்மாக் அதிகாரி, ஒரு போலீஸ் உட்பட 4 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் சென்று ஆய்வு செய்வார்கள்.

மேலும் மாவட்டத்தை விட்டு மாவட்டம் ஆய்வு செய்வதற்காக மாவட்ட மேலாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது கடைகளில் போலி மதுபாட்டில்கள் விற்பனை, குறிப்பிட்ட பிராண்டுகள் இருப்பு, கூடுதல் விலையில் விற்கப்படுவது போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர். இதன் அறிக்கைகள் உடனடியாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு அனுப்பப்பட உள்ளது. தமிழக- ஆந்திரா, கர்நாடக, புதுச்ேசரி எல்லையோர சோதனைச்சாவடிகளிலும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாநில மதுபாட்டில்கள் தமிழகத்துக்குள் வருவதை தடுப்பதிலும், போலி மதுபாட்டில்கள் நடமாட்டத்தை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shops ,festival , Deepavali festival, Tasmag shop, individuation
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்