×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் போராடி வென்றார் வோஸ்னியாக்கி

சிங்கப்பூர்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரில், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவை வீழ்த்தினார்.வெள்ளை பிரிவு ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் வோஸ்னியாக்கி (2வது ரேங்க்) - குவித்தோவா (4வது ரேங்க்) மோதினர். விறுவிறுப்பாக அமைந்த முதல் செட்டில்  வோஸ்னியாக்கி 7-5 என வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த குவித்தோவா 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுக்க  சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் குவித்தோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்த வோஸ்னியாக்கி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இப்போட்டி 2 மணி, 19  நிமிடத்துக்கு நீடித்தது. வெள்ளை பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் எலினா ஸ்விடோலினா (6வது ரேங்க், உக்ரைன்) - கரோலினா பிளிஸ்கோவா (7வது ரேங்க், செக்.) மோதினர்.இப்போட்டியில் எலினா ஸ்விடோலினா 2-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : WASANICKE WWE BENINALS , WTA phenols,Wonnanki, won fight
× RELATED டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு...