×

‘வந்தே மாதரம்’ பாடமாட்டேன்: அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அறிவிப்பு

மும்பை: வந்தே மாதரம் தேசிய கீதம் இல்லை என்பதால் அதனை பாடமாட்டேன் என்று பாரிப் பகுஜன் மகாசங் கட்சித் தலைவரும் அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.வந்தே மாதரம் பாடலை பாடமாட்டேன் என்றும் முஸ்லிம்கள் அந்த பாடலை பாட வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைசி அறிவித்திருந்தது  சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அவரது வழியில், அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரும் வந்தே மாதரம் பாடலை பாட மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தின் பர்பனியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர் கூறியதாவது;‘ஜன கன மன’ பாடல்தான் நமது தேசிய கீதம். வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல. ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய கீதம் ஒன்று இருக்கும்போது மற்றொரு பாடலின் தேவை  எங்கிருந்து எழுகிறது?நமது நாட்டின் தேசிய கீதத்தின் மீது பாஜ.வுக்கு நம்பிக்கை இல்லையா? வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தேவையில்லாத வேலை.

வந்தே மாதரம் பாடலை பாடுபவர்கள்தான் இந்தியர்கள் என்றும் மற்றவர்கள் இந்திய விரோதிகள் என்றும் முத்திரைக் குத்தும் அதிகாரம் பாஜ.வுக்கு கிடையாது. அடுத்து வரும் தேர்தலில்  காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எங்கள் கட்சித் தயாராக இருக்கிறது என ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தேவையில்லாமல் காலம் தாழ்த்தி  வருகிறது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் நாங்கள் இப்போது கூட்டணியில் இருக்கிறோம். காங்கிரஸ் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் எங்களது கூட்டணி  நீடிக்கும். சுயநலத்துக்காக அரசியல் நண்பர்களுடனான நட்பை துண்டிப்பது எங்களது வழக்கமல்ல. இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prakash ,Vande Mataram ,Ambedkar ,announcement , 'Vande Mataram' , Ambedkar's,grandson,Prakash announcement
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...