×

நவம்பர் 25ல் அரியலூரில் தமாகா 5ம் ஆண்டு பொதுக்கூட்டம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நவம்பர் 25ம் தேதி அரியலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமாகா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமாகா 5ம் ஆண்டு தொடக்க விழா நவம்பர் மாதம் 25ம் தேதி அரியலூரில் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொதுக்கூட்டமாக நடைபெறுகிறது. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தமாகா 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபோட்டு வருகின்ற வேளையில் வருகிற நவம்பர் 25ம் தேதி 5ம் ஆண்டில் அடியெடுத்து  வைக்கிறது.

தமாகாவின் தொடர் வெற்றிப்பயணத்திற்கு காரணம் இயக்கத்தின் தலைவர் முதல், மூத்த துணைத் தலைவர், மூத்த முன்னணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள்,  அனைத்து அணியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் தொடர் இயக்கப்பணிகளும், மக்கள் பணிகளும்தான். அதன் அடிப்படையில் நவம்பர் 25ம் தேதி 5ம் ஆண்டில் தமாகா  தனது வெற்றிப்பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகள், பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.இந்த 5ம் ஆண்டின் தொடக்க விழாப் பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamaga 5th Anniversary ,Ariyalur , Thamaga,Anniversary,Ariyalu,November 25th
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்