×

திருப்பத்தூர் அருகே மணல் மோசடி... விளைநிலங்களை வெட்டி செயற்கை மணல் தயாரிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக விளைநிலங்களில் உள்ள மண்ணை வெட்டி எடுத்து செயற்கை மணல் தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. மணல் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் பில்டர் மணல் என்னும் செயற்கை மணல் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

 விளைநிலங்களில் எடுக்கப்படும் மணல் அங்கு உள்ள தொட்டியில் நிரப்பப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதன் மூலம் வண்டல் மணல் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த பணிக்காக விவசாயிகளின் இலவச மின்சாரம் திட்டத்தின் கீழ் மின்சாரம் பெறப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு ஆகும்.

செயற்கை மணல் தயாரிப்பை தடுத்து நிறுத்தாவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்ற அச்சம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. இதனிடையே திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் செயற்கை மணல் தயாரிக்க தேவையான தண்ணீர் தொட்டிகள்  ஒரு வாரத்தில் அகற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tirupathur ,farmland , Sand fraud , Tirupathur,artificial sand,cutting,farmland
× RELATED திருப்பத்தூரில் சுட்டெரிக்கும்...