×

ஹங்கேரியில் ஆப்பிரிக்க யானைகளுக்கு சிறப்பு பயிற்சியளிக்கும் 22 வயது இளைஞர்

புத்தபெஸ்ட்: ஹங்கேரி நாட்டின் தலைநகர் புத்தபெஸ்ட்டை சேர்ந்த 22 வயது இளைஞர் ரீன் கேஸ்லி என்பவர் யானைகளுக்கு சிறப்பு பயிற்சியளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அங்குள்ள சர்க்கஸில் பணியாற்றி வரும் அவர் இதுவரை யாரும் பயிற்சி அளிக்காத வகையில் யானைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். ஆப்பிரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட கிம்பா என்ற யானைக்கு இவர் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார்.

இவர் அளிக்கும் பயிற்சியால் கிம்பா எனும் யானை கூடைப் பந்து விளையாட்டில் தூரத்தில் நின்றவாறே கூடைக்குள் சரியாக பந்து போடுவது, துதிக்கையில் வளையத்தை வைத்து சுழற்றுவது, சுவர் ஏறுவது போன்ற சேட்டைகளையும் கிம்பா செய்து வருகிறது. யானையுடன் விளையாடும் விடியோவை ரீன் வெளியிட்டுள்ளார். அவை சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோக்கள் விலங்குகளுக்கு நம்மீது இருக்கும் நம்பிக்கையை காட்டுகின்றன என்று கூறிய அவர் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே அன்பு மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்றும் கூறியுள்ளார். மேலும் யானைகள் நாம் நினைப்பதை விட மிகவும் புத்திசாலி என்றும் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் என் யானைகளுடன் நான் எப்போதும் பயிற்சி செய்ய முயற்சிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hungary , 22-year-old,youth,trained,African elephants,Hungary
× RELATED கள்வன் படத்துக்கு ஹங்கேரியில் பின்னணி இசை