×

பிரியாணி கடையில் ஏற்பட்ட மோதல் காங்கிரஸ் செயலாளர் வெட்டிக்கொலை: 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை

சென்னை: திருவல்லிக்கேணி பெல்ஸ்ரோடு, பாரதிசாலை சந்திப்பு பிளாட்பாரத்தில் ஷேக் என்பவர் பிரியாணி கடை வைத்துள்ளார்.ஐஸ் ஹவுஸ், லாயிட்ஸ் ரோடு அடுத்த துலுக்கானத் தோட்டத்தைச் சேர்ந்த நவாஷ்(36) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் மத்திய சென்னை செயலாளர் முகமது தாஜூதீன் அப்பாஸ்(42), ராயப்பேட்டை, ஜவஹர் உசேன்கான் முதல் தெருவை சேர்ந்த 115வது திமுக வட்ட செயலாளர் ரஹமான் செரீப்(54) ஆகியோர் கடந்த 12ம் தேதி இரவு பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் ஷேக்கை வெட்ட வந்துள்ளனர். நவாஸ், அப்பாஸ் மற்றும் செரீப் தடுக்க முயன்றபோது, ஆத்திரம் அடைந்த கும்பல், 3 பேரையும் சரமாரியாக வெட்டினர்.சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் டாக்டர் பெசன்ஸ் சாலை தனியார் மருத்துவமனை அருகில் அப்பாஸ் நேற்றிரவு 10.30 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அப்பாஸை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ரத்தம் பீறிட அப்பாஸ் துடிதுடித்து இறந்தார். பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பித்தது. நடந்த கொடூரத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவல் அறிந்த ஐஸ்அவுஸ் போலீசார் அப்பாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பிசென்ற 7 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.காங்கிரஸ் பிரமுகரை ஓட ஓடவெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாஸ் உயிரிழந்தை சம்பவத்தை கேள்விப்பட்டதும் காங்கிரஸ் பிரமுகர்கள் அப்பகுதியில் குவியத் தொடங்கினார். இச்சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் பகுதியில் பதற்றம் உருவானது. அடுத்த சிறிது நேரத்தில் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் நிலைமை மோசமானது. இதையடுத்து அங்கு 100க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : collision ,Vettikkalai ,garrison ,Brihani ,Congress , The collision ,Brihani garrison Congress, Secretary's Vettikkalai,police web
× RELATED பஞ்சாபில் சரக்கு ரயில்கள் மோதி விபத்து