×

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றி

மஸ்கட்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி தொடரில், நடப்பு சாம்பியன் இந்தியா தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், ஒமான் அணிகள் ஆகிய 6 அணிகள் மோதும் இந்த தொடர், மஸ்கட்டில் நடைபெற்று வருகிகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஒமான் அணியை 11-0 என்ற கோல் கணக்கிலும், அடுத்து பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கிலும் அபாரமாக வென்றது.இந்த நிலையில், தனது 3வது லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் மோதிய இந்தியா தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்தது. இந்திய வீரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய ஜப்பான் அணி எதிர்ப்பின்றி சரணடைய, ஆட்ட நேர முடிவில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது, இந்தியா சார்பில் லலித் உபாத்யாய் (4வது, 45வது நிமிடம்), ஹர்மான்பிரீத் சிங் (17வது, 21வது நிமிடம்), மன்தீப் சிங் (49வது, 57வது நிமிடம்), ஆகாஷ்தீப் (35’), குர்ஜாந்த் (8’), கோதஜித் (42வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

இப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணி தற்காப்பு வீரர் சுரேந்தர் குமார், தனது 100வது சர்வதேச போட்டி என்ற சாதனை மைல்கல்லை எட்டினார். புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்திய அணி (9 புள்ளி) இன்று தனது 4வது லீக் ஆட்டத்தில் மலேசிய அணியை எதிர்கொள்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian ,Champions Trophy Hockey ,India , Asian Champions,rophy Hockey,India,Hat trick
× RELATED சில்லி பாய்ன்ட்…