×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஒசாகாவை வீழ்த்தினார் ஸ்டீபன்ஸ்

சிங்கப்பூர்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் லீக் சுற்றில், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஜப்பானின் நவோமி ஒசாகாவை போராடி வென்றார்.சிங்கப்பூரில் நேற்று நடந்த இப்போட்டியில், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (5வது ரேங்க்) - நவோமி ஒசாகா (3வது ரேங்க்) மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த முதல் செட்டில் ஸ்டீபன்ஸ் 7-5 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரணடாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஒசாகா 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.
மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஒசாகாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 2 மணி, 24 நிமிடம் போராடி வென்றார். ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் மற்றும் ஜோடிகள் மட்டும் இந்த தொடரில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stephens ,WTA ,Payalals Osaka , WTA phenols,Stephanusdefeated Osaka
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கோலின்ஸ்