×

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு முக்கிய சாட்சியாக இருந்த பாதிரியார் மர்ம மரணம்

ஹோசியர்பூர்: ஜலந்தர் பேராயர் பாலியல் பலாத்கார புகார் வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட பாதிரியார் குரியகோஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறைமாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருவிளங்காடு கான்வென்ட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கேரளாவில் பணியாற்றியபோது பிராங்கோ தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு  பின், பிராங்கோ கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கில் கன்னியாஸ்திரிக்கு உதவியதாக கருதப்பட்டவர் பாதிரியார் குரியகோஸ் கத்துதாரா. மேலும் இந்த வழக்கில் இவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் பஞ்சாப் மாநிலம், ேஹாசியார்பூரில் உள்ள தசுயா கத்தோலிக்க ஆலயத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆலய வளாகத்தில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அங்குள்ள தனது அறையில் சுயநினைவின்றி நேற்று அவர் விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாதிரியார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குரியகோஸ் மரணத்திற்கான காரணம் என்ன, அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : witness ,mystery death ,Nanny , Nanny murder, rape case, priest's death
× RELATED விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு...