×

மும்பையில் பரிதாபம் கொரோனா வார்டில் தீ 10 நோயாளிகள் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பாண்டுப் எல்.பி.எஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ளது ட்ரீம்ஸ் மால். 4 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் வணிகம், மருத்துவமனை உட்பட பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்களும் உள்ளன. இந்த மாலின் 4வது தளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 73 கொரோனா நோயாளிகள் மற்றும் 3 பிற நோயாளிகள் என 76 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சுமார் 23 தீயணைப்பு வாகனங்கள், 20 தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கொரோனா நோயாளிகள் 10 பேர் தீக்காயம் காரணமாகவும், மூச்சுத்திணறியும் பரிதாபமாக இறந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. தீ விபத்தில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது….

The post மும்பையில் பரிதாபம் கொரோனா வார்டில் தீ 10 நோயாளிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Pity Corona ,Ward ,Mumbai ,Maharashtra State ,Bandup L. GP ,Mall of Dreams ,Pity Corona Ward ,Dinakaran ,
× RELATED மறைமலைநகர் நகராட்சியில் என்எச்...