×

தொடர் மழை எதிரொலி வாழைக்குளம் கண்மாய் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர்: தொடர் மழை காரணமாக திருவில்லிபுத்தூர் அருகே வாழைக்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது. இக்கண்மாயிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  திருவில்லிபுத்தூர் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மழை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது.

கண்மாயின் பாதுகாப்பு கருதி ஒரு ஷட்டர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய், வேப்பங்குளம் கண்மாய், திருமலைவணங்கி கண்மாய்க்கு செல்கிறது. வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kokku opening , Continuous rain, banana, eye opening, farmers
× RELATED மாணவி வன்கொடுமை: இளைஞருக்கு 22 ஆண்டு சிறை