×

முகலாயர்களுடன் தொடர்புடைய நகரங்களின் பெயரை மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பாட்னா: நாடு முழுவதும் முகலாயர்களுடன் தொடர்புடைய நகரங்களின் பெயரை மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அலாகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பல்வேறு எதிர்ப்புகளும் ஆதரவும் கிடைத்தன. இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய, சிறு குறு நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சரான கிரிராஜ் சிங், அலகாபாத்தின் முன்னாள் பெயர் பிரயாக், இது 16ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் மாற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும், பீகாரைக் கொள்ளையடித்தவர் கில்ஜி என்றும் பக்தியார்பூருக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பீகாரின் அக்பர்பூர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட இடங்களின் பெயரை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் முகலாயர் காலத்தில் சூட்டப்பட்ட பெயர்களை மாற்றி மீண்டும் பழைய பெயரைச் சூட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்துள்ளது நல்ல நடவடிக்கை என கிரிராஜ் சிங் கூறியுள்ளார். பீகார் உட்பட நாடு முழுவதும் முகலாயர்களுடன் தொடர்புள்ள பெயர்கள் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cities ,Giriraj Singh ,Mughals , Mughal, city, name, Union Minister Giriraj Singh
× RELATED போக்குவரத்து கழகங்களுக்கு...