×

குட்கா ஊழல் முறைகேடு வழக்கு : கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சென்னை : குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் செந்தில் முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவடையவில்லை என்ற சிபிஐ வாதத்தை ஏற்ற நீதிமன்றம், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தது.

குட்கா ஊழல் முறைகேடு : 6 அதிகாரிகள் கைது  

தமிழகத்தில் நடந்துள்ள குட்கா ஊழல் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. அது, கடந்த மாதம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து. குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ் மற்றும்  உமாசங்கர் குப்தா, உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன்,  சுகாதார ஆய்வாளர்  சிவகுமார், கலால்துறை அதிகாரி  நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேரை கைது செய்தது.

மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

முன்னதாக குட்கா முறைகேடு வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரது ஜாமின் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மேலும் குட்கா முறைகேடு வழக்கில் கைதான உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் ஜாமீன் கோரி மனு மீது விசாரணைக்கு வந்தபோது, மாதம் 2.50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக சிபிஐ குற்றச்சாட்டு இருப்பதால் செந்தில் முருகனுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியனின் ஜாமீன் மனுவோடு சேர்த்து விசாரிப்பதாக கூறி விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு நிராகரிப்பு


இந்நிலையில் மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் மற்றும் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரிகளிடம் இன்னும் விசாரணை நிறைவடையாததால் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பு வாதிட்டது. இதனிடையே 45 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் ஜாமீன் வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ வாதத்தை ஏற்ற நீதிபதிகள்,குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் செந்தில் முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோரது ஜாமீன் மனுக்களை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

காவல் ஆய்வாளர் சம்பத்தின் முன்ஜாமீன் மனு முடித்து வைப்பு

குட்கா வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சம்பத்தின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. முன்னதாக காவல் ஆய்வாளர் சம்பத் மீது எந்த வழக்கும் பதியவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது. சிபிஐ பதிலளித்ததை தொடர்ந்து வழக்கு இல்லாத நிலையில் முன் ஜாமீன் கோரியது தேவையற்றது என்று +நீதிமன்றம் தெரிவித்த நிலையில், முன்ஜாமீன் மனு முடித்துவைக்கப்பட்டது. இதனிடையே சுகாதார ஆய்வாளர் சிவகுமாரின் ஜாமீன் மனு குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Five , Stocking, corruption, abuse case: the arrest of the five persons bail rejected
× RELATED கத்திரி வெயிலை கூல்டவுன் செய்தது கோடை மழையால் குளிர்ந்தது தேனி