பத்திரிக்கையாளர் ஜமாலின் உடல் மாயமாகி விட்டதாக நாடகமாடும் சவுதி அரசு: உலக நாடுகள் கண்டனம்

துருக்கி: துருக்கியில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் ஜமாலின் உடல் மாயமாகி விட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையார் ஜமால் திடீரென மாயமானர். இதுதொடர்பாக விசாரணையில் சவுதி அரசின் தலையீடு இருக்காது என மன்னர் சல்மான் உறுதி அளித்துள்ளார். ஒசாமா பின்லேடனை 4-க்கும் மேற்பட்ட முறை நேர்காணல் செய்திருந்த ஜமால் மாயமானது சர்வதேச அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இவர் கடந்த 2-ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் சந்தேகமான முறையில் கொல்லப்பட்டார். இதில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறி வந்த சவுதி அரேபிய அரசு கஷோகி கொல்லப்பட்டதாக 2 நாட்களுக்கு முன் ஒப்புக்கொண்டது. அவரது இறப்பைப் பற்றி பல முரண்பட்ட தகவல்களையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று சவுதி தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஜமால் கடும் சித்ரவதைக்கு பின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாகவும், அதனால் அவை அனைத்தும் பிரேத பரிசோதனையில் தெரியவரும் என்பதால் சவுதி அரசு உடலை காணவில்லை என்று பொய் சொல்வதாக கூறப்படுகிறது. அவரை வைத்து பெரிய அரசியல் திட்டங்களை சவுதி தீட்டி இருக்கிறது. அதனால்தான் அவரது உடலை அளிக்க மறுக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>