வலது கையில் எலும்புமுறிவு மெஸ்ஸி 3 வாரம் ஓய்வு

பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், செவில்லா அணிக்கு எதிராக விளையாடியபோது பார்சிலோனா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஏலும்புமுறிவு ஏற்பட்டது.எதிரணி வீரர் பிராங்கோவுடன் மோதி கீழே விழுந்த மெஸ்ஸிக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு மைதானத்திலேயே கட்டு போடப்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மெஸ்ஸி 3 வார காலம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. செவில்லா அணியுடனான போட்டியில் பார்சிலோனா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியின் கோடின்யோ (2வது நிமிடம்), மெஸ்ஸி (12’), சுவாரெஸ் (63’). ராக்கிடிச் (88’) ஆகியோர் கோல் அடித்தனர். செவில்லாவின் முதல் கோல் பார்சிலோனா வீரர் லெங்லெட் அடித்த ஓன் கோல் மூலமாகக் கிடைத்தது (79’). கடைசி கட்டத்தில் முரியல் (90+1’) ஆறுதல் கோல் போட்டார். புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா (18), அலாவெஸ் (17), செவில்லா (16), அத்லெடிகோ மாட்ரிட் (16) அணிகள் முன்னிலை வகிக்க, ரியல் மாட்ரிட் அணி (14) 5வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கவலையில்லாதவர் கையில் ஆட்சி : மு.க.ஸ்டாலின் ‘டிவிட்’