×

துணை ராணுவ படையில் 61,000 பணியிடங்கள் காலி

புதுடெல்லி: மத்திய துணை ராணுவ படைகளில் 61 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை போன்ற மத்திய துணை ராணுவ படைகளில் 10 லட்சம் வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படைப்பிரிவுகளில் தற்போது 61 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது :துணை ராணுவ படைகளில், ஓய்வு, ராஜினாமா, மரணம் உள்ளிட்ட காரணங்களால் காலி பணியிடங்கள் உருவாகின்றன. இந்த பணியிடங்கள், நேரடி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட நியமன விதிகளின்படி நிரப்பப்பட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான சிஆர்பிஎப்.பில் கடந்த மார்ச் 1 வரையிலான காலக்கட்டத்தில் 18 ஆயிரத்து 460 பணியிடங்களும், எல்லை பாதுகாப்புப் படையில் 10 ஆயிரத்து 738 பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதே காலக்கட்டத்தில் சசாஸ்திரா சீமாபால் பிரிவில் 18 ஆயிரத்து 942 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தோ- திபேத் எல்லை காவல் படைப்பிரிவில் 5,786 பணியிடங்களும், அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் 3,840 பணியிடங்களும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைப்பிரிவில் 3,812 பணியிடங்களும் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 61,000,jobs,vacant,paramilitary force
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...