×

பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி: பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

சென்னை: விழாக்கால சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பில்தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பு: ‘தனலட்சுமி’ என்ற இத்திட்டத்தின்படி வரும் மாதங்களுக்கான பில்களை முன்னதாக செலுத்துபவர்களுக்கு தள்ளுபடி உண்டு. பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும். இந்த விழாகால நாட்களில் அடுத்த 5 மாதங்களுக்கான பில் தொகைகளை முன்னதாக செலுத்துபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி அடுத்துவரும் 2வது பில்லில் இருந்து தொடங்கி அந்தந்த பில்லில் வழங்கப்படும்.

இந்த விழாக்கால நாட்களில் பில் தொகையை செலுத்தும் அனைத்து பிஎஸ்என்எல் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் அனைத்து பில்களிலும் 2 சதவீத  தள்ளுபடி வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BSNL , Bill Amount, Special Discounts, BSNL
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...