×

குழாய் உடைப்பால் வீணாகும் தாமிரபரணி குடிநீர்

விருதுநகர்: குழாய் உடைப்பால் விருதுநகரில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வீணாகி வருகிறது. விருதுநகர் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தாமிரபரணி, ஆணைக்குட்டம் அணை வெளிப்பகுதி கிணறுகள், ஒண்டிப்புலி, கருசேரி கல்குவாரிகளில் தண்ணீர் பெறப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் உள்ள 22 ஆயிரம் குடியிருப்புகளில் சுமார் 18 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் பெரும்பான்மையான குழாய்கள் 30 முதல் 40 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

அருப்புக்கோட்டை ரோடு மேம்பாலத்திற்கு கீழ் நகராட்சி பார்க் மேல்நிலை தொட்டியில் இருந்து வரும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் சாலையில் வீணாகி வருகிறது. நகரில் 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், குடிநீர் வீணாகி வருவதை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamiraparani , Pipe, tamarabarani, drinking water
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்