×

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் மாடல் ரூ.70,031 விலையிலும், கார்பன் எடிசன் மாடல் ரூ.73,500 விலையிலும், ரேஸ் எடிசன் ரூ.80,211 விலையிலும் கிடைக்கும். அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 2019 மாடலாக வந்திருக்கும் புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், பெரிய விண்ட் ஸ்கிரீன் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், புதிய நீல வண்ணத்திலும் எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் இனி கிடைக்கும். கருப்பு வண்ண அலாய் வீல்கள் கவர்ச்சியை அதிகரிக்கின்றன.

இந்த ஸ்கூட்டரில் 154.8 சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10.4 பிஎச்பி பவரையும், 11.4 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ் அல்லது காம்பி பிரேக் சிஸ்டம் இல்லாதது ஏமாற்றம். எனினும், வரும் 2019ம் ஆண்டு முதல் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த டிசைனில் மாற்றம் இல்லை என்றாலும், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்பொலிவுடன் வந்துள்ளது ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aprilia SR 150, Scooter
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்