×

புதிய ஹோண்டா சிஆர்வி அறிமுகம்

நீண்ட தாமதத்திற்கு பின்னர், புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக ஹோண்டா சிஆர்வி கார் டீசல் இன்ஜின் ஆப்ஷனிலும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன்கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், சிறப்பான கையாளுமையை பெறுவதற்கான அஜில் ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, தடத்தை காட்டும் கேமரா ஆகிய ஏராளமான பாதுகாப்பு அம்சஙகள் உள்ளன. இதன் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் ஐ-விடெக் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 151 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

முதல்முறையாக சிஆர்வி எஸ்யூவி இந்தியாவில் டீசல் மாடலிலும் வந்துள்ளது. டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் 2 வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும், டீசல் மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.4 கிமீ மைலேஜ், டீசல் மாடல் லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜ் வழங்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. ஒயிட் ஆர்ச்சிட் பியர்ல், ரேடியண்ட் ரெட், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணங்களில் வெளிவந்துள்ளது. பெட்ரோல் 2 வீல் டிரைவ் மாடல் ரூ.28.15 லட்சத்திலும், பெட்ரோல் ஆல் வீல் டிரைவ் மாடல் ரூ.30.65 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.32.75 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Introduction ,Honda , Honda CRV
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...