×

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது உண்மை தான் : சவுதி அரேபியா ஒப்புதல்

ரியாத்; உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோகியின் கொலை தங்களது துணை தூதரகத்தில் தான் நிகழ்ந்ததாக சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. அரேபியாவைச் சேர்ந்தவரும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபருமான ஜமால் கசோகி கடந்த 2-ம் தேதி துருக்கியில் மாயமானார். இஸ்தான்புல்லில் உள்ள அரேபிய துணை தூதரகத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது. ஆனால் இதனை சவுதி அரேபியா மறுத்து வந்த நிலையில், அரேபியா மீது அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் தங்களது தூதரகத்தில் ஜமால் கசோகி கொல்லப்பட்டது உண்மை தான் என சவுதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது.

இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நல்லது. இது ஒரு நல்ல முதல்படி என நினைக்கிறேன். இது மிகப்பெரிய நகர்வு. பல மக்கள் இதில் தொடர்புபட்டிருக்கிறார்கள். நீங்களும், ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் உண்மையில் மிக சிறப்பானவர்கள் என்றார். கொல்லப்பட்ட பத்திரிகையாளரான ஜமால் கசோகி அரேபியாவின் மன்னர் ஆட்சியை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இதனால் அவரை கொல்ல திட்டமிட்ட அரேபியா, துருக்கியில் தங்களது துணை தூதரகத்தில் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. தன்னுமைய திருமணத்திற்காக ஆவணங்களை பெற சென்ற ஜமால் கசோகியின் தலையை துண்டித்து கொன்றுள்ளனர். அவரது விரல்கள் உட்பட உடல் பாகங்களை பிடுங்கி எடுத்து அவரை சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். ஜமால் கட்டியிருந்த ஸ்மார்ட் கை கடிகாரம் மூலம் கிடைத்த ஆடியோ பதிவுகளின் மூலம் இத்தகவல்கள் உறுதியானது. கொலை தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழுவையும் அரேபியா அமைத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jamal Kassogi ,Saudi Arabia , Saudi Arabia, journalist, Jamal Kassogi, Deputy Consulate, Murder
× RELATED வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச...