×

தேசிய நெடுஞ்சாலையோரம் உயிர் பலி வாங்க காத்திருக்கும் கிணறு

கிருஷ்ணகிரி :  பர்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உயிர்பலி வாங்க காத்திருக்கும் தரைமட்ட கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான  வாகனங்கள் வந்து, செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை என்பதால், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால், அவ்வப்போது விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்  பர்கூர் அருகே உள்ள அண்ணா நகர் என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம்  சுமார் 50 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணறு உள்ளது.

ஆனால், இந்த கிணற்றுக்கு தடுப்புச்சுவர் இல்லாமல், செடி, கொடிகள்,  மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், சாலையில் வேகமாக  வரும் வாகனங்கள் எதிர்பாராத விதமாக சாலையை விட்டு விலகினால், இந்த  கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நிகழும் முன்பாக, இந்த கிணறு உள்ள இடத்தில் இரும்பு வேலி அமைக்க வேண்டும்.  அல்லது கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : National Highway , national highways,well, danger, road side, krishagiri, bargur
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...