×

டென்மார்க் ஓபன் பேட்மின்டன்: கால் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் சீன நட்சத்திரம் லின் டானுடன் மோதிய கிடாம்பி 18-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு கடுமையாகப் போராடிய அவர் அடுத்த 2 செட்களையும் 21-17, 21-16 என வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.  ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் மற்றும் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான லின் டானுன் 5 முறை மோதியுள்ள கிடாம்பி 2வது வெற்றியை வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. கால் இறுதியில் சக இந்திய வீரர் சமீர் வர்மாவுடன் கிடாம்பி மோதுகிறார்.  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kitampi Srikanth , Denmark Open Badminton, Srikanth
× RELATED டென்மார்க் ஓபன் பேட்மின்டன் வெள்ளி பதக்கம் வென்றார் சாய்னா