×

மராட்டியத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, 144 தடை உத்தரவு பிறப்பித்து அரசு அதிரடி!!

மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை கடந்தது. குறிப்பாக மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 36,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது, தினசரி பாதிப்பில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் சூழல் குறித்த ஆய்வுக் கூட்டம் மராட்டிய முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை கண்காணிப்பாளா்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.கூட்டத்துக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வணிக வளாகங்கள் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.நாளை முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளோம். பொது வெளியில் 4 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இதை உள்ளூா் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை. தேவைப்பட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post மராட்டியத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, 144 தடை உத்தரவு பிறப்பித்து அரசு அதிரடி!! appeared first on Dinakaran.

Tags : Maratham ,Mumbai ,Maharashtra ,Marathum ,
× RELATED மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு!