×

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை

சென்னை : இன்று விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என்று பொருளாகும். எனவே விஜயதசமி நாளன்று குழந்தைகளை பள்ளிகளி்ல் சேர்த்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் நிலவுகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். ஆண்டுதோரும் விஜயதசமி நாளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு விடுமுறை நாளான இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூன்று வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை எல்கேஜியிலும், ஐந்து வயது நிறைந்த குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும் நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது. அதன்படியே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட்டு வரும் நிலையில், ஆங்கில வழி கல்வியும் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு உடனடியாக விலையில்லா பாடப்புத்தகம், சீருடைகளை வழங்க வேண்டும் என கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,Tamilnadu , Vijayadashami,Tamil Nadu,Student admissions,Government schools
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...