×

பணத்தை திருப்பி தராத சொகுசு விடுதி நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு: கரூர் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

சென்னை: கரூர் மாவட்டம் வெள்ளியணை தாளியபட்டியை சேர்ந்தவர் நவநீதநாச்சிமுத்து (38). சுவீடனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சென்னை அடையாறில் உள்ள ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட் சொகுசு விடுதி நிறுவனம் ஒன்று, உலகம் முழுவதும் தங்களுக்கு விடுதிகள் உள்ளன. ஆண்டுக்கு 3 நாட்கள் வீதம் தங்குவதற்கு ரூ.1.85லட்சம் செலுத்த வேண்டும். முதல் தவணையாக ரூ.18167 கட்ட வேண்டும் என அறிவித்திருந்தது. இதற்காக நவநீதநாச்சிமுத்து பணத்தை கட்டினார். மேலும் திட்டத்தில் சேர விருப்பம் இல்லை என்றால் 10 நாட்களில் பணம் திருப்பித்தரப்படும் என அறிவித்தது. அதன்படி நவநீதநாச்சிமுத்து பணத்தை திருப்பி தருமாறு விண்ணப்பித்தார். ஆனால் பணத்தை தராமல் ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடித்தனர். இதனையடுத்து 2015ம் ஆண்டு மே மாதம் கரூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி செங்கோட்டையன், உறுப்பினர்கள் செல்வி, செல்வநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணையின்போது அந்நிறுவனம், பணத்தை அவரது கணக்கில் செலுத்தவிட்டோம் என கூறி ஒரு பணபரிவர்த்தனை எண்ணை தாக்கல் செய்தனர். ஆனால் பணம் செலுத்தவில்லை என்பது விசாரணையின் போது தெரிய வந்தது. இதனையடுத்து நீதிபதி,  சொகுசு விடுதி நிறுவனம் கோர்ட்டை ஏமாற்ற முனைந்தது மனுதாரருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.1லட்சம் வழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மேலும் வழக்கு செலவு ரூ.3 ஆயிரம், மனுதாரர் செலுத்திய 18167ஐ ஆண்டுக்கு 9சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hotel company ,consumers ,Judge ,Karur Consumer Court , Luxury hotel company, compensation, curur consumer court verdict
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...