அர்ஜென்டினாவை வீழ்த்தியது பிரேசில்

அர்ஜென்டினா - பிரேசில் அணிகள் மோதிய நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம்பெறாத நிலையில், பிரேசில் அணிக்காக நெய்மர் களமிறங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்திலும் கோல் ஏதும் விழாமல் இரு அணிகளும் சமநிலை வகித்தன. காயம் காரணமாக வீணான நேரத்தை ஈடு செய்வதற்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் கடைசி விநாடிகளில் (93வது நிமிடம்), கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி நெய்மர் பறக்கவிட்ட பந்தை மிராண்டா மின்னல் வேகத்தில் தலையால் முட்டி வலைக்குள் திணித்தார்.

பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இரு அணிகள் 105 முறை மோதியுள்ளதில் பிரேசில் 41-38 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது (26 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன).

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: