×

விரிசல் ஏற்பட்டாலும் மேலப்புதூர் ரயில்வே பாலத்துக்கு இப்போது ஆபத்து இல்லை

திருச்சி: திருச்சி ஜங்ஷனில் இருந்து கரூர் மார்க்கமாக செல்லும் ரயில்கள்  திருச்சி மேலபுதூர் ரயில்வே பாலத்தின் வழியாக செல்கிறது.  இந்த பாலத்தின் அடியில் பஸ்கள், டூவீலர்கள் செல்லும் வகையிலும், மேலே ரயில்கள் செல்லும் வகையிலும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 60 அடி அகலமுள்ள இந்த பாலதத்தை தாங்கும் வகையில்  நீளமான தூண் அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த தூணின் மேல் பாகத்தில் நீண்ட விரிசல் விட்டுள்ளதுடன் பாலத்தின் அடிப்பகுதியில் காரைகள் பெயர்ந்து கான்கிரீட் காம்பிகள் வெளியே தெரிந்து கொண்டிருக்கிறது.

இதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் நேற்று அந்த பாலத்தை ஆய்வு செய்தனர்.  ரயில்வே கட்டுமானப்பிரிவு பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்தபின் அந்த பாலத்தின் அடிப்பகுதியில்  காரை பெயர்ந்த இடத்தில் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே தரப்பில் கூறும்போது இது லேசான கீறல் தான் இதன் மூலம் இப்போதைக்கு ஆபத்து இல்லை. இந்த பாலத்தின் வழியாக தினமும் 20 முறை ரயில் போக்குவரத்து நடப்பதால் அந்த அதிர்வு காரணமாக பாலத்தில் மேலும் கீறல் பெரிதாகிறதா, அல்லது இந்த சீரமைப்புடன் பாலம் சரியாகி விடுமா என்பது  விரைவில் தெரியவரும். அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Melaputhur Railway Bridge , Crack, mulpatur, railway bridge, danger
× RELATED பொறியியல் மாணவர் சேர்க்கை...